செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (17:05 IST)

மக்களே இந்த அரசு #நமக்கு_எதிரான_அரசு- இயக்குநர் பா.ரஞ்சித் டுவீட்

நேற்று,  சென்னை தீவுத்திடல் அருகே காந்திநகர் குடிசைவாழ் மக்களை வெளியேற்றும் அரசின் முடிவுக்கு தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், சத்தியவாணி முத்து நகர் குடிசை வாழ் மக்களின் இடப்பெயர்வு குறித்து நாம் வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக சொல்லிவிட்டு, மறு கணமே மக்களை அப்புறப்படுத்த ஆணையிட்ட இந்த அரசு மக்களுக்கு எதிரான அரசு என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

சென்னையைச் சுத்தப்படுத்தும் திட்டத்தைத்தான் ஆளும் கட்சியினர் செய்து வருகின்றனர். சென்ன்னைத் தீவுத்திடலின் அருகே உள்ள காந்திநகர் குடிசைவாழ் மக்களை வெளியேற்ற அரசு முடிவு செய்தால்… அம்மக்களுக்கு அப்பகுதியிலிருந்து 8 கிமீ தொலைவுக்குள் மாற்று இடம் தர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:


சத்தியவாணி முத்து நகர் குடிசை வாழ் மக்களின் இடப்பெயர்வு குறித்து நாம் வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக சொல்லிவிட்டு, மறு கணமே மக்களை அப்புறப்படுத்த ஆணையிட்ட துணை முதல்வர் @OfficeOfOPSஅவர்கள்Pouting facePouting face. விழித்துக் கொள்ளுங்கள் சென்னை வாழ் குடிசைப்பகுதி மக்களே இந்த அரசு #நமக்கு_எதிரான_அரச எனத் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சர்பேட்டா பரம்பரை விரைவில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.