செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 ஜனவரி 2021 (12:55 IST)

கிரிக்கெட்டில் புதிய விடியல்… நடராஜனை பாராட்டிய பி சி ஸ்ரீராம்!

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடியுள்ள நடராஜனுக்கு சினிமா ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. முன்னதாக டி20 போட்டிகள் மூலம் பிரபலமடைந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயண ஆட்டத்தில் இடம்பெற்ற தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் புகழ் பெற்றுள்ளார். இதையடுத்து டெஸ்ட் போட்டியிலும் இடம்கிடைத்துக் கலக்கினார்.

ஆஸ்திரேலியா தொடரை சிறப்பாக முடித்து இந்தியா வந்துள்ள நடராஜனுக்கு சொந்த ஊரில் சாரட் வண்டியில் வைத்து மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவைப் பகிர்ந்த ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ‘நான் சமீபகாலமாக கிரிக்கெட் பார்ப்பதில்லை. ஆனால் சமூகவலைதளங்களின் மூலமாக உங்களைப் பற்றி தெரிந்துகொண்டேன். உங்கள் மூலமாக கிரிக்கெட்டில் புதிய விடியல் ஏற்பட்டுள்ளதற்காக உங்கள் மாநிலத்துக்காரன் என்பதால் பெருமை அடைகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.