கோல்டன் க்ளோப் விருதுக்கு தேர்வான மலையாளப் படம்!
பாயல் கபாடியாவின் ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றது. அதன் பின்னர் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கிராண்ட் பிரிக்ஸை வென்ற முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை இது பெற்றது. ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தப் படத்தின் இந்திய விநியோக உரிமையைப் பெற்றுள்ளது. ஜிகோ மைத்ரா, சாக் அண்ட் சீஸ் பிலிம்ஸ் மற்றும் ரணபீர் தாஸ், அனதர் பர்த் ஆகிய படங்களைத் தயாரித்தவர்களே இந்தப் படத்தையும் தயாரித்துள்ளனர்.
கேரளாவில் இருந்து மும்பைக்கு தங்கள் வாழ்க்கை லட்சியத்தை அடைய இரண்டு பெண்கள் வருகிறார்கள் என்பதுதான் படத்தின் கரு. அவர்களின் நோக்கம் நிறைவேறியதா என்பதே படத்தின் கதை. இந்நிலையில் தற்போது இந்த படம் கோல்டன் க்ளோப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் ஆகிய பிரிவுகளில் இந்த படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோல்டன் க்ளோப் விருது பெற அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.