'சர்கார்' டீசர் ரிலீஸ் தேதி: 'மெர்சல் சாதனையை முறியடிக்க விஜய் ரசிகர்கள் திட்டம்

Last Modified புதன், 10 அக்டோபர் 2018 (12:27 IST)
விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தின் டீசர் வரும் ஆயுதபூஜை நாளில் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. ஆம், வரும் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு 'சர்கார்' டீசர் ரிலீஸ் ஆகவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

யூடியூபில் இதுவரை அதிக பார்வையாளர்களை கொண்ட டீசர் என்ற பெருமையை 'மெர்சல்' படத்தின் டீசர் தக்க வைத்துள்ளது. இந்த சாதனையை இன்னும் எந்த படத்தின் டீசரும் முறியடிக்காத நிலையில் தங்கள் சாதனையை தாங்களே முறியடிக்க விஜய் ரசிகர்கள் திட்டமிட்ட்டுள்ளனர்.


sarkar
அதன்படி சன் பிக்சர்ஸ் வெளியிடும் அதிகாரபூர்வ சர்கார் டீசர்
வீடியோவை தவிர வேறு எந்த லிங்க்கையும் ஷேர் செய்ய வேண்டாம் என இப்போதே விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். 'மெர்சல்' சாதனையை முறியடித்து இணையத்தில் தாங்கள் அசைக்க முடியாத இடத்தில் இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்று திட்டமிடும் விஜய் ரசிகர்களின் எண்ணம் ஈடேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :