திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2023 (10:37 IST)

1000 கோடி வசூலில் இணைய உள்ள ஷாருக் கானின் பதான்!

ஷாருக் கான் நடித்துள்ள பதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பெற்றுள்ளது.

ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பதான். 4 ஆண்டுகள் இடைவெளியில் ஷாரூக்கான் நடித்துள்ள படம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியான பதான் தொடர் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி வெளியாகி 20 நாட்களில் உலகம் முழுவதும் பதான் திரைப்படம் ரூ.951 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் பதான் 1000 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை நிகழ்த்த உள்ளது. இதுவரை இந்தியாவில் பாகுபலி 2, கேஜிஎஃப் 2 மற்றும் டங்கல் ஆகிய படங்கள் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.