1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (14:39 IST)

1000 கோடி வசூல் செய்த பதான்! பாலிவுட்டின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷாருக் கான்!

ஷாருக் கான் நடித்துள்ள பதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பெற்றுள்ளது.

ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பதான். 4 ஆண்டுகள் இடைவெளியில் ஷாரூக்கான் நடித்துள்ள படம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியான பதான் தொடர் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் இப்போது பதான் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்தியாவில் மட்டும் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் பாகுபலி 2, கேஜிஎஃப் 2 மற்றும் டங்கல் ஆகிய படங்கள் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.