திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:38 IST)

ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நடந்த இடத்தில் 'பசுமை வழி சாலை' படப்பிடிப்பு

சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை பற்றி `பசுமை வழிச் சாலை சேலம் - சென்னை' என்ற பெயரில் புதிய  திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை சந்தோஷ் கோபால் என்பவர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்த சந்தோஷ், இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

இப்படக்குழு தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ராஜஸ்தானின் ஜெய்பூர், உதய்பூர் மற்றும் ஜெய்சலமார் ஆகிய பகுதிகளில் நடந்தியது.
 
கிறிஸ்டோபர் நோலன் டைரக்டு செய்த (DARK NIGHTS RISES) டார்க் நைட் ரைசஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு, 
 
ராஜஸ்தானிலுள்ள சந்த் பவரி என்ற இடத்திலுள்ள பழமையான கிணற்றில்  நடந்தது. அதோ இடத்தில் பசுமை வழி சாலை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது.