1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (17:46 IST)

பார்த்திபன் நடித்த படத்தின் இயக்குனர் காலமானார்: மாரடைப்பு என தகவல்

asokan
பார்த்திபன் நடித்த படத்தின் இயக்குனர் காலமானார்: மாரடைப்பு என தகவல்
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடித்த ‘குண்டக்க மண்டக்க’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அசோகன் சற்றுமுன் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
நடிகர் பார்த்திபன் நடித்த குண்டக்க மண்டக்க என்ற திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்கியவர் அசோகன் என்பவர் சற்று முன்னர் திடீரென காலமானார் என்ற தகவல் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது 
 
மாரடைப்பு காரணமாக இயக்குனர் அசோகன் காலமானார் என்று கூறப்படுகிறது. மறைந்த இயக்குனர் அசோகனுக்கு வயது 64. இயக்குனர் அசோகன் மரணமடைந்ததை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.