திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (13:37 IST)

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்: அரசியல் பிரபலங்கள் இரங்கல்

sedappatti muthaiah
முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்: அரசியல் பிரபலங்கள் இரங்கல்
முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. இவர் உடல் நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சற்று முன் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த சேடப்பட்டி முத்தையா அவர்களுக்கு வயது 75 ஆகும்.
 
கடந்த 1991 முதல் 96 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவைத் தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சேடப்பட்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து அவர் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார் என்பதும் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
 
கடந்த 2006 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகிய சேடப்பட்டி முத்தையா செயல் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.