திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (12:58 IST)

சன் டிவி செய்தி வாசிப்பாளர் சண்முகம் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

shunmugam
சன் டிவி செய்தி வாசிப்பாளர் சண்முகம் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சன் டிவியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சண்முகம் என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 
கடந்த 90களில் சன் டிவியில் தனது கணீர் குரலால் செய்தி வாசித்து மக்களின் ஆதரவைப் பெற்றவர் சண்முகம். இவர் செய்தி வாசிப்பது மட்டுமின்றி ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்
 
இந்த நிலையில் செய்தி வாசிப்பாளர் சண்முகம் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 52.  இதனை அடுத்து முதல்வர் முக ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது: "தனது தனித்த குரல்வளத்தால் தமிழ் இல்லங்கள் தோறும் எதிரொலித்த ஊடகவியலாளர் . சண்முகம் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். கால் நூற்றாண்டுக்கும் மேலான தனது ஊடகப் பயணத்தில், கணீர் குரல் - ஒழுங்கான வாசிப்பு - துல்லியமான உச்சரிப்பு என்று, செய்தி வாசிப்பில் அவர் இலக்கணமாய்த் திகழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.
 
அவரது மறைவு ஊடக உலகிற்குப் பேரிழிப்பு. அவரது பிரிவால் வாடும் ஊடக நண்பர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்
 
அதேபோல் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அழகு தமிழுக்கு சொந்தக்காரர், சிறந்த பட்டிமன்ற பேச்சாளர், இனிய நண்பர் சண்முகம் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. தமிழ் ஊடக உலகில் தனது குரலால் மக்களின் இதயத்தில் இடம் பிடித்து அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.