1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (20:47 IST)

சூர்யாவின் படம் விருதுக்கு தேர்வு

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த படம் சூரரைப் போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கினார். கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது.

அத்துடன் இப்படம் இந்தியாவில் அதிகப்பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையும் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்குத் தகுதி பெற்ற  300க்கும் மேற்பட்ட படங்களில் சூரரைப் போற்று படமும் நுழைந்து  சாதனை படைத்தது.

மேலும், ஆஸ்திரேலியாவில் , இந்தியன் ஃபிலிம்ஃபெஸ்டிவெல் மெல்போர்ன் பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டு சிறந்த படம் என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த இயக்குநர் பிரிவில் சுதா கொங்கரா பெயரும், சிறந்த நடிகர் பிரிவில் சூர்யாவின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து 26 மொழிகளில் சுமார் 100 படங்கள்  திரையிடப்பட்டத்தில் சூரரைப் போற்று படமே சிறந்த படமாகத் தேர்வாகியுள்ளது.