கிடப்பில் கிடந்த த்ரிஷா படத்துக்கு ஒரு வழியா ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

papiksha| Last Updated: வியாழன், 13 பிப்ரவரி 2020 (19:45 IST)

தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு என்ற படத்தில் த்ரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்
நந்தா, வேல ராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன், மற்றும் பேபி மானஸ்வி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பல நாட்களாக இப்படத்தின் ரிலீஸ் கிடப்பில் கிடந்தது வந்த நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர்.


அதவது, இந்த படம் வருகிற பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகவுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து த்ரிஷா நடித்து வரும் ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :