வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 13 ஜூலை 2017 (15:48 IST)

பண்டிகை படத்தின் 2 நிமிட வீடியோ

கிருஷ்ணா நடித்திருக்கும் பண்டிகை படத்தின் 2 நிமிட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.


 

 
சென்னை 600028 படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான விஜயலட்சுமி பண்டிகை திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் கிருஷ்ணா மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர். பெரோஸ் இயக்கியுள்ளார். ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தவுடன் திரையரங்க உரிமையாளர்கள் நடத்திய ஸ்டிரைக் காரணமாக பண்டிகை படம் வெளியாவது தள்ளிப்போனது. 
 
நாளை வெளியாகவுள்ள படத்தின் 2 நிமிட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் மைய கதையின் வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளனர். நிழல் உலகில் நடக்கும் சண்டை போட்டி தான் கதையின் திருப்பம் என படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
 

நன்றி: Moviebuff Tamil