வாய் பேசமுடியாதவரை பேசவைத்த பாண்டியராஜன்… இதுதான் சினிமாவோட மேஜிக்கே!
எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக படம் பார்க்க விரும்பும் அனைவருக்கும் பிடித்த படம், பாண்டியராஜன் இயக்கி நடித்த படமான, ஆண்பாவம். எப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் ரசிகர்களை நகராமல் பிடித்து வைக்கும் மேஜிக் அந்தப் படத்துக்கு உண்டு. அதுமட்டுமில்லாமல் இயக்குனர் ஜெயகாந்தனுக்கே அந்த படம் மிகவும் பிடித்த படம் என்று அவரது மகள் ஒரு நிகழ்வில் கூறியுள்ளார். 1986 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பாண்டியன், பாண்டியராஜன், சீதா மற்றும் ரேவதி ஆகியோரோடு வி கே ராமசாமி மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோரும் நடித்திருந்தனர்.
இந்த படம் பற்றி ஒரு நிகழ்வில் பேசிய இயக்குனர் பாண்டியராஜன் “படத்தில் ரேவதி கிணற்றில் குதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, மருத்துவர் ஒருவர் பூர்ணம் விஸ்வநாதனிடம் உங்கள் மகளுக்கு இனிமேல் பேச்சு வராது எனக் கூறுவார். அந்த காட்சியில் மருத்துவராக நடித்தவர் உண்மையில் பாண்டியராஜனின் நண்பராம். ஆனால் அவர் வாய் பேச முடியாதவராம். ஷூட்டிங்கின் போது அவரை வாயசைக்க சொல்லிவிட்டு, பின்னர் டப்பிங்கில் வேறொருவரை பேச வைத்தாராம். படம் ரிலீஸ் ஆன போது அந்த நபர் தான் பேசுவதைக் கேட்டு கண்ணீர் கலங்க பாண்டியராஜனிடம் வந்து நன்றி சொன்னாராம்” என பேசியுள்ளார்.