வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (15:37 IST)

இயக்குநர் பா. ரஞ்சித் மீதான வழக்கு ரத்து

ராஜராஜன் சோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன்  5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் பற்றி கடுமையான விமர்சித்தார்.

அதில் ராஜ ராஜ சோழன் காலத்தில் தான் தலித்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது என்று கூறினார். இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

பா. ரஞ்சித்தின் பேச்சுக்கு  சமுக வலைதளங்களிலும் கடுமையான விமர்சங்கள் எழுந்தது. பல இந்துஅமைப்புகளும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தன.

இதனையடுத்து பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலிஸார் சமீபத்தில்  வழக்குப்பதிவு செய்தனர். கலவரத்தைத்தூண்டும் விதமாகப் பேசியதாக 153,153A ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று இயக்குநர் பா.ரஞ்சித் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராஜராஜன் சோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், வரலாற்று புத்தகங்களில் உள்ள தகவல்களையே குறிப்பிட்டதாக பா.ரஞ்சித் பதில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.