திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2023 (07:30 IST)

பா ரஞ்சித் தயாரிக்கும் தண்டகாரண்யம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் பா.ரஞ்சித். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான  அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து, ஆர்யாவுடன் சட்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.

இந்த நிலையில்,  நீலம் புரடெக்சன் சார்பில், தினேஷ் நடிப்பில், ஆதிரை இயக்கும் புதிய படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்குத் தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இப்போது மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.