வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2023 (15:58 IST)

அதென்ன எங்களுக்கு மட்டும் கொரோனா சோதனை? – கடுப்பான சீனா!

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. முக்கியமாக சீனாவில் நாளுக்கு நாள் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸின் பி.எப் 7 வகை திரிபு சீனாவில் அதிகரித்துள்ளது.

இதனால் அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ளன. ஆனால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் சீன பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை.

இந்நிலையில் தங்கள் நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகள் குறித்து சீனா தன் அதிருப்தியை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவொ நிங் “சீன பயணிகளை மட்டும் குறிவைத்து சில நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்த நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது. பதிலுக்கு சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்க முடியும்” என்று பேசியுள்ளார்.

Edit By Prasanth.K