1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 13 மே 2020 (13:23 IST)

வெறும் பேச்சுக்கே பங்குச் சந்தையை எகிற வைத்த மோடி!!

பிரதமர் மோடியின் அறிவிப்புகளின் எதிரொலியாக மும்பையில் பங்குச்சந்தையில் வர்த்தகம் அதிகரித்துள்ளது.
 
பிரதமர் மோடி தனது நேற்றைய 5வது உரையில் 17 ஆம் தேதிக்குப் பிறகான 4 ஆம் கட்ட ஊரடங்கு பற்றியும், ரூ.20 லட்சம் கோடிக்கு நாட்டில் பொருளாதார சிறப்புத் திட்டங்கள் குறித்தும் தகவல் வெளியிட்டார்.  
 
இந்நிலையில், பிரதமர் மோடி கூறிய ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகளை இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் குறித்து இதில் விளக்கப்படலாம் என தெரிகிறது. 
 
இது குறித்த அறிவிப்புகள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், இந்த அறிவிப்புகளின் எதிரொலியாக மும்பையில் பங்குச்சந்தையில் வர்த்தகம் அதிகரித்துள்ளது.
 
ஆம், சென்செக்ஸ் 669 புள்ளிகள் உயர்ந்து 3200040 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 205 புள்ளிகள் உயர்ந்து 9401 புள்ளிகளில் வர்த்தகமாகியது குறிப்பிடத்தக்கது.