புதன், 6 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (08:19 IST)

மூத்த இயக்குனரையே சீண்டிய வடிவேலு… ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நடந்த காரசார சம்பவம்!

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.இந்த இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் ராதிகா, ரவி மரியா உள்ளிட்டோர் நடிக்கும் நிலையில் கதாநாயகி யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சில நாட்கள் ஷூட்டிங்கில் அவர் கலந்துகொண்டார். முதல் பாகத்தில் எப்படி ஜோதிகாவின் நடனம் பேசப்பட்டதோ அதுபோல இந்த படத்திலும் கங்கனாவின் நடனம் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்த வடிவேலு மட்டுமே இந்த பாகத்தில் தொடர்கிறார். ஆரம்பத்தில் படக்குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்த வடிவேலு, நாட்கள் செல்ல செல்ல முரண்டு பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படக்குழு மொத்தமும் அவர் மேல் மனக்கசப்பில் இருந்த நிலையில், ஒரு நாள் இயக்குனர் பி வாசு கோபமாகி, வடிவேலுவை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தே வெளியேற சொல்லிவிட்டார் என்று திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.