திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 11 மார்ச் 2023 (11:11 IST)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் பாராட்டு!

rajinikanth
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 
 
எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற புகைப்பட கண்காட்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த கண்காட்சியை கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் பார்வையிட்டு தங்களது கருத்தை தெரிவித்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற புகைப்பட கண்காட்சியை இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பார்வையிட்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்க்கை பயணம் அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான் என்று கூறினார்.
 
மேலும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் படிப்படியாக முன்னேறி உள்ளார் என்றும் அவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் முதலமைச்சர் பதவி என்றும் தெரிவித்தார். மேலும் அவர் நீண்ட ஆரோக்கியத்தை தான் இருக்க வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran