1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2022 (09:20 IST)

இயக்குனர் பி எஸ் மித்ரனுக்கு வந்த தெலுங்கு பட வாய்ப்பு… அப்போ சர்தார் 2?

கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி வெளியாகியுள்ள படம் “சர்தார்”.  கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது.

படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் பி எஸ் மித்ரனுக்கு டொயோடா கார் ஒன்றை கார்த்தி பரிசளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. மேலும் படத்தின் வெற்றி விழா சந்திப்பில் சர்தார் 2 திரைப்படம் உருவாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது இயக்குனர் பி எஸ் மித்ரன் தெலுங்கில் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை நாகார்ஜுனாவே தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.