வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Updated : சனி, 23 டிசம்பர் 2017 (15:10 IST)

ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து ஓவியா விலகவில்லை - படக்குழு அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து ஓவியா விலகவில்லை என படக்குழு தெரிவித்துள்ளது.


 

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் படம் ‘காஞ்சனா 3’. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக வேதிகா மற்றும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியால் புகழ்பெற்ற ஓவியா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
 
ஆனால், படத்தில் இருந்து ஓவியா விலகிவிட்டதாகவும், வாங்கிய அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதை படக்குழு மறுத்துள்ளது. 
 
ஓவியா தொடர்ந்து படத்தில் நடித்து வருவதாகவும், வெளிவருகின்ற செய்திகளில் உண்மையில்லை என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.