1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (17:52 IST)

யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் ஓவியா!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு. இவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ள புதிய படத்தை அன்கா மீடியா தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மதயானை, களவாணி, உள்ளிட்ட படங்களில் நடித்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ஓவியா நடிக்கவுள்ளார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இப்படத்தின் பூஜை வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதுகுறித்து நடிகை ஓவியா தனது டுவிட்டர் பகக்த்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.