திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (19:47 IST)

கலாச்சாரம் என்ற பெயரில் எதையும் மறைக்க வேண்டாம்: பிறந்த நாளில் ஓவியா அட்வைஸ்

oviya
கலாச்சாரம் என்ற பெயரில் எதையும் மறைக்க வேண்டாம் என நடிகை ஓவியா தனது பிறந்த நாள் அட்வைஸாக கூறியுள்ளார்
 
சேலம் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் தனது பிறந்தநாளை மாணவர்கள் மத்தியில் கொண்டாடிய ஓவியா அதன் பின் செய்தியாளர்களிடம் கூறியபோது கலாச்சாரம் என்ற பெயரில் எதையும் மறைக்க வேண்டாம் என்றும் ஓபனாக அனைத்தையும் பேச வேண்டும் என்றும் அப்போது தான் தீர்வு கிடைக்கும் என்றும் கூறினார்
 
மேலும் ஆண் பிள்ளைகளிடம் பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்றும் சிறுவயதிலேயே அவ்வாறு வளர்த்தால் எந்தவிதமான குற்ற செயல்பாடுகளிலும் ஆண் பிள்ளைகளை ஈடுபட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்