செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (19:02 IST)

"நா ரொம்ப ஓவரா பீஃல் பண்ணுறேன்" - ஹீரோ பட ரொமான்டிக் பாடல் வெளியீடு!

நம்ம வீடு பிள்ளை வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
 
இவர்களுடன் பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜூன், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகிற டிசம்பர் 20 ம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்ண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரிலீசாகவுள்ள இப்படத்தின் செக்கென்ட லுக் போஸ்டர் , டீசர் உள்ளிட்டவை சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.
 
இந்நிலையில் சற்றுமுன் " ஓவரா பீஃல் பண்ணுறேன் " என்ற ரொமான்டிக் லிரிகள் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. பா. விஜய் மற்றும் MC சனா வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை யுவன் சாகர் ராஜாவும்,  MC சனாவும் இணைந்து பாடியுள்ளனர்.