திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2023 (14:26 IST)

'' #MAAMANNAN- மக்களின் பேராதரவுக்கு எங்கள் அன்பும், நன்றியும்''- உதயநிதி ஸ்டாலின்

maamannan
மாமன்னன் படத்திற்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி  என  நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இத்திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம்  கடந்த வாரம்  வெளியாகி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வசூல் குவித்து வரும் நிலையில் இப்படத்திற் அரசியல் தலைவர்கள், சினிமா  பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் நேர்மறையாக  விமர்சனங்கள்  கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்,  இப்படத்திற்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின். இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’#மாமன்னன் வெளியாகி இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் 465க்கும் அதிகமான திரையரங்குகளிலும், இந்தியாவின் பிற பகுதிகள் முழுவதும் 250க்கும் மேலான திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. #MAAMANNAN ஐ #Megablockbuster ஆக கொண்டாடும் மக்களின் பேராதரவுக்கு எங்கள் அன்பும், நன்றியும்’’ என்று தெரிவித்துள்ளார்.