1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2023 (19:52 IST)

கலைஞரின் படைப்புலக சரித்திரத்தை போற்றுவோம்! - உதயநிதி ஸ்டாலின்

udhayanithi
தமிழகத்தில், முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் பல்வேறு மக்கள் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சியை திமுக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த நிலையில்,  #கலைஞர்100 ஐ முன்னிட்டு, கலைஞரின் படைப்புலக சாதனைகளை மாண்புமிகு முதலமைச்சர்  முக.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, #கலைஞர்_கலைஞர் எனும் தலைப்பில் ஆண்டு முழுவதும் கொண்டாடவுள்ளோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’நாடகம் - இலக்கியம் - பாடல்கள் - வசனங்கள் - திரைப்படங்கள் என தமிழ் படைப்புலகின் திசைவழிப்போக்கை திருத்தி எழுதியவர் நம் முத்தமிழறிஞர் அவர்கள்.

#கலைஞர்100 ஐ முன்னிட்டு, கலைஞரின் படைப்புலக சாதனைகளை மாண்புமிகு முதலமைச்சர்  முக.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, #கலைஞர்_கலைஞர் எனும் தலைப்பில் ஆண்டு முழுவதும் கொண்டாடவுள்ளோம்.

இப்பணியை ஒருங்கிணைக்க மாண்புமிகு அமைச்சர்கள் - அரசு உயர் அதிகாரிகள் - திரைக்கலைஞர்கள் - கவிஞர்கள் உள்ளிட்ட படைப்பாளிகள் அடங்கிய குழுவினை கழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் முதற்கட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று தலைமையேற்று நடத்தினோம்.

சமூகநீதியையும்- சமத்துவத்தையும் சமரசமின்றி பேசிய கலைஞரின் படைப்புலக சரித்திரத்தை போற்றுவோம்!’’ என்று தெரிவித்துள்ளார்.