1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 21 ஜனவரி 2022 (09:52 IST)

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு விமான நிலையம்… ஜெகன் மோகன் ரெட்டியின் புதிய திட்டம்!

ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களிலும் ஒரு விமான நிலையம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆந்திராவின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி நியமிக்கப்பட்டதில் இருந்து அதிரடியான திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அப்படி அவர் கொண்டு வர இருந்த மூன்று தலைநகரங்கள் திட்டம் விமர்சனங்கள் வந்ததை அடுத்து கைவிடப்பட்டது. இதையடுத்து இப்போது ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களுக்கும் ஒரு விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த விமான நிலையங்கள் அனைத்துமே ஒரே அளவில் இருக்கும்படியும், போயிங் விமானங்கள் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.