செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (12:49 IST)

‘மாஸ்டர்’ ஒருவருட கொண்டாட்டம்: மாஸ் ஸ்டில் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து அந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மாஸ் ஸ்டில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் இரண்டாவது அலை முடிவுக்கு வந்தபோது வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. அதுவரை திரையரங்குகளுக்கு செல்வதற்கு ரசிகர்கள் அச்சப்பட்டு கொண்டு இருந்த நிலையில் ரசிகர்களை அச்சத்தை போக்கி சுமார் 300 கோடி ரூபாய் திரையரங்குகளில் மட்டுமே வசூல் செய்த படம் ‘மாஸ்டர்’ 
 
இந்த நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெற்றதை அடுத்து ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சற்று முன் ‘மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து இதுவரை வெளிவராத ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது