புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (15:39 IST)

பொங்கல் தினத்தில் கைதி பட ரசிகர்களுக்கு நல்லறிவிப்பு!

கைதி 2 படம் பற்றிய அப்டேட் பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான கார்த்தியின் கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை இப்போது இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. தமிழில் தயாரித்த எஸ் ஆர் பிரபுவே இந்தியிலும் தயாரிக்கிறார்.

இந்நிலையில் கைதி படத்தின் 2 ஆம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. இது சம்மந்தமாக அவ்வப்போது தயாரிப்பாளரும் அப்டேட் கொடுத்து வந்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகை அன்று கைதி 2 பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.