1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 15 செப்டம்பர் 2018 (11:48 IST)

திருநங்கைகள் நடத்திய நிகழ்ச்சியில் கம்பீர் - குவியும் பாராட்டுக்கள்

கிரிக்கெட் வீரர் கம்பீர் திருநங்கைகள் நடத்திய நிகழ்ச்சியில் பங்குபெற்று அவர்கள் அணியும் ஆடைகளை அணிந்து அவர்களுக்கு மரியாதை செய்த விஷயம் பலரின் பாராட்டுக்கு ஆளாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் பிளேயராக இருந்த கம்பீர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். சிறந்த ஆட்டக்காரர் கம்பீர் என்று பெயரெடுத்த அவர் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதிலும் சலைத்தவர் அல்ல. மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் அவர் செய்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் திருநங்கைகள் மட்டுமே பங்கேற்கும்  ‘ஹிஜ்ரா ஹப்பா’ எனும் விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கௌதம் கம்பீர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். 
 
அவர்களின் அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்கு சென்ற கம்பீர், பெண் வேடத்தில் சென்று அங்கிருந்த திருநங்கைகளை உற்சாகப்படுத்தினார். அங்கிருந்த திருநங்கைகள் கம்பீருக்கு ராக்கி கட்டினர். 
இதுகுறித்து பேசிய கம்பீர் ‘ஆண் அல்லது பெண்ணாக இருப்பது விஷயமல்ல. மனித நேயம் மிக்க மனிதர்களாக இருப்பது தான் முக்கியம் என தெரிவித்திருக்கிறார். கம்பீரின் இந்த மனித நேய செயல் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.