ஓ மை காட்: கொட்டும் மழையிலும் அசராத அஜித் ரசிகர்கள்

sivalingam| Last Modified திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (01:15 IST)
தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கியுள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் வியாழன் அன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆன்லைன் முன்பதிவு வசதி இல்லாத திரையரங்குகளில் கவுண்டர்களின் முன்பதிவு நடந்து வருகிறது.

 
இந்த நிலையில் நெல்லை காளீஸ்வரி-சரஸ்வதி திரையரங்கில் இன்று முன்பதிவு நடைபெற்றது. தியேட்டர் கவுண்டரின் முன் நூற்றுக்கணக்கான அஜித் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருந்தனர்.
 
இந்த நிலையில் திடீரென மழை கொட்டியது. ஆனால் வரிசையில் நின்றிருந்த ஒரு அஜித் ரசிகர் கூட வரிசையில் இருந்து வெளியேறவில்லை. கொட்டும் மழையிலும் வரிசையில் இருந்து கலைந்து செல்லாமல் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.


இதில் மேலும் படிக்கவும் :