ஓ மை கடவுளே.... சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!

papiksha| Last Updated: வியாழன், 13 பிப்ரவரி 2020 (13:27 IST)அஸ்வத் மாரிமுத்து இயக்கி
அசோக் செல்வன் நடித்துள்ள "ஓ மை கடவுளே" படம் இன்று திரைக்கு வந்துள்ளது. ஜோடியாக
ரித்திகா சிங் நடித்துள்ள இப்படத்தில் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

சிறு வயதில் இருந்து நண்பர்களாக பழகி வரும் அசோக் செல்வன் -
ரித்திகா சிங் பின்னர் திருமணம் செய்துகொள்ளும் போது அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதே இப்படத்தின் கசையம்சம்.
அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி தயாரித்துள்ள இப்படம் காதலர் தினத்தின் ஸ்பெஷலாக இன்று திரைக்கு வந்துள்ளது. தொடர்ந்து வார இறுதி நாட்கள் என்பதால் நிச்சயம் கலெக்ஷன் அள்ளும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல டிவி சேனலான ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
காதலர் தினத்தை ஓ மை கடவுளே படத்துடன் கொண்டாடுங்கள்.இதில் மேலும் படிக்கவும் :