1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2024 (15:54 IST)

நாட்டை திருத்த இந்தியன் தாத்தாதான் வரணுமா? நீங்க என்ன பண்றீங்க? - சீமான் குடுத்த இந்தியன் - 2 விமர்சனம்!

Seeman Indian 2

இன்று சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 வெளியாகியுள்ள நிலையில் அதை பார்த்த நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியாகியுள்ள படம் இந்தியன் 2. சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இன்று வெளியான இந்த படம் திரையரங்குகள் முழுவதும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று இந்த படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், சினிமா இயக்குனருமான சீமான் படத்தை புகழ்ந்துள்ளார். படம் குறித்து பேசிய அவர் “ஒரு நாடு சுத்தமாக வேண்டுமானால் முதலில் வீடு, தெரு சுத்தமாக வேண்டும். அதை இந்த படம் வலியுறுத்தி பேசியிருக்கிறது.
 

ஒரு அதிகாரி ஊழல் செய்தால் அவனை சட்டப்படி தண்டிக்கலாம். அரசியல்வாதி தவறு செய்தால் மக்கள் தேர்தலில் அவரை நீக்கி சரியான ஆளை தேர்வு செய்யலாம். இது எல்லாத்திற்குமே மாற்று உள்ளது. ஆனால் மக்களே தவறான கண்ணோட்டம் கொண்டவர்களாக மாறிவிட்டால் அந்த சமுதாயம் நஞ்சாகிவிடும். சமீப காலங்களில் அந்த தெருவில் ஓட்டுக்கு பணம் தந்தார்கள், எங்களுக்கு தரவில்லை என மக்கள் போராட்டம் செய்த சம்பவங்களை பார்த்தபோது கஷ்டமாக இருந்தது.

இன்றைய சமுதாயத்திற்கு பல நல்ல கருத்துகளை சொல்லும் படமாக இந்தியன் 2 உள்ளது. எல்லா தவறுகளையும் சரிசெய்ய ஒரு கடவுள் வருவார், தேவதூதன் வருவார், இந்தியன் தாத்தா வருவார் என்று எதிர்பார்த்திராமல் மக்களே களம் இறங்க வேண்டும். நல்ல திரைக்கதையோடு, நல்ல கருத்துகளை வழங்கிய இயக்குனர் ஷங்கருக்கும், இந்த படத்தில் பல சிரமங்களை மேற்கொண்டு நடித்த உலக நாயகன் அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கும் வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K