திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2024 (11:32 IST)

சந்திக்க ஆசைப்பட்ட ரஹ்மானை ஒரு வாரம் காக்கவைத்து அவமதித்த மைக்கேல் ஜாக்சன்… தக்க சமயத்தில் பதிலடி கொடுத்த இசைப்புயல்!

தமிழ் சினிமாவில் இருந்து புயலென புறப்பட்டு இந்தியா முழுவதும் இசைமழைப் பொழிந்த ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் என்ற திரைப்படத்துக்கு ஆஸ்கர் விருது பெற்றதின் மூலமாக உலகப் புகழ் பெற்றார்.

பல உலக இசைக் கலைஞர்களும் அவரை சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். ஆனால் தன்னுடைய இசை ஆதர்சங்களில் ஒருவரான மைக்கேல் ஜாக்சனைப் பார்க்க வேண்டுமென ஏ ஆர் ரஹ்மான் ஒரு வாரம் அமெரிக்காவில் காத்திருந்தாராம். ஆனால் கடைசி வரை அவரிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை.

ஆனால் ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட போது சந்திக்கலாம் என அழைத்தாராம் மைக்கேல் ஜாக்சன். ஆனால் அப்போது “என்னால் உங்களை சந்திக்க முடியாது” என ஏ ஆர் ரஹ்மான் சொல்லிவிட்டாராம்.