திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2019 (12:14 IST)

இதுவரை யாரும் எனக்கு அப்படி செய்ததில்லைனு கவினிடம் சொன்னியே இது என்ன...?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாகவே கவின் - லொஸ்லியாவின் ரொமான்ஸ் தான் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனாலே ரசிகர்கள் மிகுந்த எரிச்சலுக்குளாகிவிட்டனர். குறிப்பாக சாக்ஷி , அபிராமி சென்றதிலிருந்தே லொஸ்லியா எந்நேரமும் கவினுடன் தான் கதைத்துக்கொண்டிருக்கிறார். 


 
மேலும் மிட்நைட்டில் கார்டன் ஏரியாவில் அமர்ந்துகொண்டு இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது நேற்று இருவரும் பேசிக்கொண்டிருந்த போது  லொஸ்லியா கவினிடம் தன் பிறந்தநாளுக்கு இதுவரை யாரும் எனக்கு கேக் வெட்டியதில்லை என்று கூறியிருந்தார். கடைசியாக நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது தன் நண்பர் ஒருவர் தன் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதாக கூறினார். 


 
ஆனால், லொஸ்லியா சொன்னதெல்லாம் பொய் என்று தற்போது ஆதாரத்துடன் நிரூபணமாகியுள்ளது. அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டில் தனது 21வது பிறந்தநாளை கொண்டாடிய லொஸ்லியாவுக்கு நண்பர்கள் கேக் வெட்டிய புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் எதுக்கு இப்படி பொய் சொல்லணும் என லொஸ்லியாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.