1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (21:46 IST)

4 படங்கள் வெளியாகியும் காலியான திரையரங்குகள்: என்ன காரணம்?

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் திரையரங்குகளுக்கு செல்வதற்கு மக்கள் தயங்கி வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் மாஸ்டர் திரைப்படம் வெளியானபோது திரையரங்குகளில் கூட்டம் குவிந்ததால் இனிமேல் திரையரங்குகளில் வழக்கம்போல் கூட்டம் வரும் என்று யூட்யூபில் தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று கூறிக் கொண்டு இருப்பவர்கள் வதந்தியை கிளப்பி விட்டனர் 
 
ஆனால் இன்று நான்கு புதிய திரைப்படங்கள் வெளியாகியும் ஒரு திரைப்படத்திற்கு கூட திரையரங்குகள் நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஒருசில திரைப்படங்களுக்கு கூட்டம் வரவில்லை என்பதால் காட்சி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
C/o காதல், பாரீஸ் ஜெயராஜ், குட்டி ஸ்டோரி மற்றும் நானும் சிங்கிள் தான் ஆகிய நான்கு திரைப்படங்கள் இன்று வெளியாகியும் எந்த திரையரங்கிலும் திரையரங்குகளில் பாதி இருக்கைகள் கூட நிரம்ப வில்லை என்பது சோகமான ஒன்றாகும் 
 
ஓடிடியில் பார்த்து பழகிவிட்ட பொதுமக்கள் இனி திரையரங்குகளுக்கு மீண்டும் வருவார்கள் என்பது சந்தேகமே என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன