1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2017 (18:33 IST)

அமலாபால் மீது எந்த தவறும் இல்லை: புதுவை அமைச்சர்

சொகுசுக்கார் வாங்கிய விஷயத்தில் நடிகை அமலாபால் மீது எந்த தவறும் இல்லை என்றும், அவர் முறையான ஆவணங்கள் கொடுத்தே கார் வாங்கியுள்ளதாகவும் புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.


 


கடந்த இரண்டு நாட்களாக அனைத்து ஊடகங்களிலும் அமலாபால் வரிஏய்ப்பு செய்வதற்காக புதுவை முகவரியில் கார் வாங்கியதாக செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து விசாரணை செய்து ஆதாரம் இருந்தால் அமலாபால் மீது நடவடிக்கை எடுக்க புதுவை ஆளுனர் கிரண்பேடியும் உத்தரவிட்டிருந்தார்

இந்த நிலையில் புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜஹான் ஆகியோர் நடிகை அமலாபால் முறையான ஆவணங்களை சமர்ப்பித்தே புதுச்சேரியில் சொகுசு காரை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். முதல்வரும் கவர்னரும் அமலாபால் விஷயத்திலும் முரண்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.