காக்கிச்சட்டையில் கலக்கும் நிவின் பாலி
‘புலி முருகன்’ படத்தை இயக்கிய வைசாக் இயக்கத்தில், போலீஸாக நடிக்கிறார் நிவின் பாலி.
மோகன்லால் நடிப்பில் சூப்பர் ஹிட்டான மலையாளப் படம் ‘புலி முருகன்’. வைசாக் இயக்கிய இந்தப் படம், தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. தன்னுடைய அடுத்த படத்தில் மம்மூட்டியை இயக்கப் போகிறார் வைசாக் என்று ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன. காரணம், ‘போக்கிரி ராஜா’ படத்தின் மூலம் வைசாக்கை இயக்குனராக்கியதே மம்மூட்டிதான். ஆனால், அவர்கள் இருவரும் மறுபடி இணைய கொஞ்ச காலம் ஆகும்.
இதற்கிடையில், நிவின் பாலியை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் வைசாக். இந்தப் படத்திற்காக, இரண்டாவது முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் நிவின் பாலி. ஏற்கெனவே, ‘ஆக்ஷன் ஹீரோ பைஜு’ படத்தில் போலீஸாக நடித்திருந்தார் நிவின் பாலி. ஆனால், அந்தப் படத்தில் நடித்தது போல் சாதாரண போலீஸாக இல்லாமல், அதிரடி போலீஸாக நடித்திருக்கிறாராம்.