செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (12:10 IST)

நிவின் பாலியின் நேரடி தமிழ்ப்படம் ‘ரிச்சி’ டீசர் வெளியீடு!

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நிவின் பாலி. அவரின் சூப்பர் ஹிட் படமான ‘பிரேமம்’ தமிழில் ரிலீஸாகாவிட்டாலும், மலையாளத்தில் பார்த்தே அவரிடம் மனதைப் பறிகொடுத்தனர். இந்நிலையில், இன்னொரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நிவின் பாலி. மிஷ்கின் உதவியாளர் கெளதம் ராமச்சந்திரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

 
 
நிவின் பாலி நடித்துள்ள நேரடித் தமிழ்ப்படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜும், விஷாலின்  தந்தை ஜி.கே.ரெட்டியும் நடிக்கின்றனர். 
 
கடந்த 2014-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகிய சூப்பர் ஹிட் படமான "உலிடவாறு கண்டந்தே" எனும் படத்தின் ரீமேக் தான் "ரிச்சி". இந்நிலையில், நிவின் பாலி நடிப்பில் உருவாகியிருக்கும் "ரிச்சி" படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் நேற்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.