திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 19 மே 2020 (10:13 IST)

மதுர பொண்ணுன்னு சொன்னா யாரவது நம்புவாங்களா...? கவர்ந்திழுக்கும் நிவேதா பெத்துராஜ்!

'ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.     தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

மேலும், அவ்வப்போது தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த " அல வைகுந்தபுரமுலோ " படத்தின் முக்கிய ரோலில் நடித்து புகழ்பெற்றார். மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்த இவர் மாடர்ன் தமிழ் பெண் முகஜாடையில் அனைவரும் கவர்ந்துவிட்டார்.

இந்நிலையில் இந்த கொரோனா ஊரடங்கில் எப்போதும் இல்லாத அளவுக்கு சோஷியல் மீடியாவில் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் சிம்பிள் பியூட்டியாக காஃபி குடிக்கும் செல்பி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வசியம் செய்து வருகிறார். இந்த புகைப்படத்தை லைக்ஸ் கமெண்ட்ஸ் பிச்சி அடிக்கிறது.