வந்தாச்சு 9 லட்சம் தடுப்பூசிகள்... 18 வயத்துக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல்!
நாளை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்பதே மத்திய மாநில அரசுகளை நோக்கமாக உள்ளது.
மார்ச் 1 முதல் 55 வயதுக்கு மேலானவர்களுக்கும், ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேலானவர்களுக்கும், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி எப்போது முதல் போடப்படும் என்று கேள்விகள் எழுந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்க இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், 9 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்து சேர்ந்துள்ளதாகவும், நாளை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைப்பார் எனவும் தகவல் வெளியிட்டுள்ளார்.