1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (16:04 IST)

தமிழ் சினிமாவுக்கு புதிய டிஜிட்டல் சேவை

தமிழ் சினிமாவுக்கு புதிய டிஜிட்டல் சேவை டிஜிட்டல் சேவை வழங்குநருடன் ஒப்பந்தம் செய்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.

 
வடஇந்தியா முழுவதும் ஆயிரத்தி ஐம்பது திரைஅரங்குகளில் டிஜிட்டல் சேவை வழங்குநராக இருக்கும் மிகப்பெரிய நிறுவனமான K sera sera தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயம் செய்த  கட்டணத்தில் தமிழ் படங்களுக்கு தியேட்டர்களில் E cinema டிஜிட்டல் சர்வீஸ் தருவதற்கும் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இரண்டாவது மாஸ்டரிங் யூனிட்டாக செயல்படுவதற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் இன்று ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்மூலம் E cinema-வுக்கும் இனி தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து மட்டுமே திரைஅரங்கங்களுக்கு நேரடியாக கன்டன்ட் (படம்) கொடுக்கப்படும்.