புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (09:39 IST)

அஜித்தை ஃபாலோ செய்கிறாரா நயன்தாரா?

அஜித்தைப் போலவே நயன்தாராவும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார். 
அஜித், கடந்த ஏழெட்டு வருடங்களாக எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. தன்னுடைய படத்தின் பூஜை, இசை வெளியீடு, புரமோஷன் நிகழ்ச்சிகள் பக்கம் அவர் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் அவர், அது சம்பந்தமான நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டுவதில்லை.
நயன்தாராவும் அப்படித்தான். தன்னுடைய எந்த படத்தின் புரமோஷன்களிலும் கலந்து கொள்வதில்லை. சமீபத்தில் வெளியான ‘அறம்’ படத்துக்கு மட்டும் தியேட்டர் விஸிட் அடித்தார். மற்றபடி ஊடகங்களுக்குப் பேட்டிகள் கூட கொடுப்பதில்லை.
 
இந்நிலையில், காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காக சினிமாத்துறையினர் நடத்திய போராட்டத்தில், அஜித்தைப் போலவே நயன்தாராவும் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர் அஜித்தை ஃபாலோ செய்கிறார் என்கிறார்கள்.