ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 மார்ச் 2021 (17:32 IST)

ரஜினியின் நெற்றிக்கண் திரைப்படம் ரீமேக் – யார் நடித்தால் நன்றாக இருக்கும்!

ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது நெற்றிக்கண் திரைப்படம்.

ரஜினி, சரிகா மற்றும் மேனகா அகியோர் நடிப்பில் 1981 ஆம் வருடம் வெளியானத் திரைப்படம் நெற்றிக்கண். இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் ரஜினி பெண் பித்தனாக நடித்திருந்த கதாபாத்திரம் ரஜினிக்கு பெயர் வாங்கிக் கொடுத்த கதாபாத்திரங்களுள் ஒன்று.

இந்நிலையில் வெளியாகி 39 ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படத்தின் ரீமேக் பணிகள் நடந்து வருகிறதாம். இந்நிலையில் ரஜினி கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறதாம். ரஜினி அளவுக்கு அந்த கதாபாத்திரத்தை சரியாக செய்யக்கூடிய நடிகர் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.