1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 மார்ச் 2021 (12:28 IST)

அண்ணாத்த படக்குழுவினர் இமானுக்கு அளித்த மரியாதை!

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இமானுக்கு அண்ணாத்த படக்குழுவினர் படக்குழுவில் மரியாதை அளித்துள்ளனர்.

விஸ்வாசம் திரைப்படத்திற்கு சிறப்பாக இசையமைத்த டி.இமான் அவர்களுக்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை கூறிவந்தனர். இந்நிலையில் இப்போது அவர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

அவர் இசையமைத்த ஒரு பாடலின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது அதைக் காண அவர் சென்றுள்ளார். அப்போது ரஜினிகாந்த் இமானுக்கு விருது கிடைத்ததை மைக்கில் அறிவிக்க சொல்லி படக்குழுவினரை பாராட்ட சொல்லி இமானை நெகிழ வைத்துள்ளார்.