வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 1 ஜூன் 2018 (21:00 IST)

மகளுடன் கொடுக்கும் போஸா இது? அமீர்கானுக்கு குவியும் கண்டனங்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் அமீர்கான் மீது அவரது மகள் இரா கவர்ச்சியான உடையில் படுத்து கொண்டு சிரித்து கொண்டிருப்பதாக உள்ளது.
 
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஒரு தந்தை மகளுடன் இப்படியா புகைப்படம் எடுத்து கொள்வது? என்று வசைபாடி வருகின்றனர்.
 
ஆனால் இந்த போஸ் அமீர்கான் படத்தில் வரும் 'டங்கல்' படத்தில் வரும் போஸ் என்றும், ஒரு தந்தைக்கு அவரது மகள் எத்தனை வயதானாலும் அவர் மகள் தான் என்றும், இந்த புகைப்படத்தில் தவறாக ஒன்றும் இல்லை என்றும், தவறு பார்ப்பவர்களின் மனதில் தான் இருப்பதாகவும் அமீர்கான் ரசிகர்கள் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 
இருப்பினும் இந்த புகைப்படம் அருவருப்பை தருவதாக பெரும்பாலான வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன