1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2023 (16:43 IST)

இரங்கல் தெரிவிக்காத ஒரே நடிகர் வடிவேலு தான்.. நெட்டிசன்களின் கடும் விமர்சனங்கள்..!

கேப்டன் விஜயகாந்த் இன்று காலை காலமான நிலையில் அவரது மறைவிற்கு பிரதமர் மோடி முதல் தமிழக முதலமைச்சர் வரை பல அரசியல் தலைவர்களும் தமிழக திரை நட்சத்திரங்கள் மட்டுமின்றி வெளி மாநில திரை நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் திரையுலகை பொறுத்தவரை விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்காத ஒரே நடிகர் வடிவேலு தான் என நெட்டிசன்கள் கடும் கோபத்தை இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

வடிவேலு திரையுலகில் ஆரம்ப கட்டத்தில் இருந்தபோது அவரை பல திரைப்படங்களில் தூக்கிவிட்டவர் விஜயகாந்த் தான். தன்னுடைய படத்திலேயே அவர் வாய்ப்பு வழங்கியது மட்டுமின்றி தான் நடிகர் சங்க தலைவராக இருக்கும்போது அவருக்கு பல உதவிகளும் செய்துள்ளார்.

ஆனால் இருவருக்கும் இடையே ஒரு சின்ன பிரச்சனை வந்த பிறகு விஜயகாந்த்தை கடுமையாக வடிவேலு விமர்சனம் செய்தார். ஆனாலும் வடிவேலுவை எந்த  காலத்திலும் விஜயகாந்த் தரக்குறைவாக விமர்சனம் செய்ததில்லை.

இந்த நிலையில் இன்று விஜயகாந்த் காலமாகிய தினத்தில் கூட தன்னுடைய வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு விஜயகாந்துக்கு ஒரு இரங்கல் தெரிவிக்காமல் இருப்பது மனிதத் தன்மையற்றது என நெட்டிசன்கள் வடிவேலு குறித்து பதிவு செய்து வருகின்றனர்.

இப்போதும் கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை, நான் விஜயகாந்த்தை பேசியது தவறு, அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று வடிவேலு ஒரு வார்த்தை தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் வடிவேலு செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Mahendran