செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (15:36 IST)

மாற்றப்பட்ட "நேர்கொண்ட பார்வை" ரிலீஸ் தேதி? இருந்தாலும் ரசிகர்கள் மகிழ்ச்சி தான்!

பாலிவுட் சினிமாவின் டாப் நடிகையான வித்யா பாலன் அஜித்தின் நேர்கொண்ட பார்வை  படத்தின் மூலம் தமிழுக்கும் அறிமுகமாகியிருக்கிறார். அஜித் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்க மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார். 
 
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ’பிங்க்’ படத்தின் ரீமேக்கான  நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்த நிலையில் 
இந்த படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது வந்த தகவலின்படி இந்த படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அல்லது ஜூலை 25 ஆம் தேதியே வெளியாகும் என்று கூறப்படுகிறது. 


 
இதற்கு முக்கிய காரணமே பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருப்பதால் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை முன் கூட்டியே வெளியிட திட்டமிட்டுள்ளனராம். படம்  திட்டமிட்ட நாளுக்கு முன்னரே வெளிவரவிருப்பதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். எனவே இதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினரால் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.