இதுக்குதான் இந்த அலப்பறையா?- ஹாலிவுட் படத்தில் நெப்போலியன்

nepolean
Last Updated: திங்கள், 1 ஜூலை 2019 (13:17 IST)
தமிழ் நடிகர்கள் பாலிவுட்டில் நடிப்பது சகஜமான ஒன்று. ஆனால் ஹாலிவுட்டில் நடிப்பது என்பது அவர்களுக்கே சவாலான ஒன்று. ஒருசில தமிழ் நடிகர்களே ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில் அந்த பட்டியலில் நடிகர் நெப்போலியனும் இணைகிறார்.

தமிழில் 1991ல் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் வில்லனாக அறிமுகமானவர் நெப்போலியன். பிறகு ஹீரோவாக வளர்ந்து தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அரசியலில் ஈடுபட்ட இவட் திமுகவில் இணைந்து எம்.எல்.ஏ மற்றும் எம்.பி பதவிகளையும் வகித்தார். தற்போது அரசியலை விடுத்து அமெரிக்காவில் போய் செட்டிலாகி விட்டார்.

இந்நிலையில் இவர் நடித்திருக்கும் ஹாலிவுட் படமான “கிறிஸ்மஸ் கூப்பன்” என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நெப்போலியன் “தமிழில் வில்லனாக நடித்துதான் ஹீரோ ஆனேன். அதுபோலவே இப்போது ஹாலிவுட்டில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளே. அடுத்து பிரபல ஹாலிவுட் நடிகருடன் நானும் ஒரு ஹீரோவாக நடிக்க உள்ளேன். நான் நடித்திருக்கும் மற்றொரு படமான ”டெவில்ஸ் நைட்” என்ற படம் ஷூட்டிங் முடிந்து கடைசி கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன” என தெரிவித்தார்.

ஹாலிவுட்டில் தமிழ் நடிகர்கள் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. இவர் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகம் ஆகும் முன்னரே 1988ல் வெளியான “ப்ளட் ஸ்டோன்” என்ற ஹாலிவுட் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். அவரது மருமகன் தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கும் “பக்கிரி” கூட ஹாலிவுட் படம்தான். இந்த சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்ததற்கா நெப்போலியன் இவ்வளவு பிரமாதப்படுத்துகிறார் என தமிழ் சினிமாவினர் கடுப்பாகி உள்ளதாக தெரிகிறது. படத்தின் ட்ரெய்லரில் கூட 2 வினாடிகள்தான் வருகிறார் நெப்போலியன்.


இதில் மேலும் படிக்கவும் :